பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுஜா, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்ந்தார். அவர் இந்த போட்டியின் இறுதி வரை செல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவருடைய போராட்டம் ரசிக்கும் வகையில் இருந்தது

இந்த நிலையில் சற்றுமுன்னர் சுஜா ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சர்வசாதாரணமாக ஒரு பைக்கை ஓட்டி செல்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ஒரு கைதேர்ந்த பைக் ரேஸர் போல சுஜா பைக் ஓட்டுவதை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்

மேலும் பைக்கை ஓட்டுவதை போன்ற சில ஸ்டில்களையும் சுஜா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.