பலத்தை சர்ச்சைகளுக்கு மத்தியில் தீபாவளியன்று விஜயின் சர்கார் திரைப்படம் வெளியாகி வசூலை வாரியுள்ளது.

இப்படத்துக்கு ஊடகங்கள் மற்றும் பலதரப்பட்டவர்கள் கலவை விமர்சனத்தையே கொடுத்தனர்.

இதனிடையே, ‘சர்கார்’ வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிய நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டுமே 29 திரையரங்குகளில் அப்படம் தூக்கப்பட்டு அஜித் ரசிகனாய் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’ திரையிடப்பட்டுள்ளது.

பில்லா பாண்டி திரைப்படத்துக்கு பெருகிவரும் அஜித் ரசிகர்களின் ஆதரவு அப்படத்துக்கு நல்ல வசூலை ஈட்டித் தந்துள்ளது.

இப்படத்தில், கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் நடிப்பும், வில்லன் கே.சி.பிரபாத் நடிப்பும் மிக அருமையாக இருந்தது என படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.