வரும் மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நாளில் ‘எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம்’ என்ற சிங்கிள் பாடலை யுவன்ஷங்கர் ராஜா வெளியிடவுள்ளார்.

இந்த பாடல் ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ என்ற ப்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க தல பெருமையை கூறும் இந்த பாடலுக்கு இளையவன் என்பவர் இசையமைத்துள்ளார். ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்