கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் அந்த நேரத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது.

அதாவது நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் பொருட்களையும் பல இடங்களில் இருந்து வரும் பொருட்களையும், அப்போதைய முதல்வர் ஜெவின் புகைப்படத்தை ஒட்டிக்கொடுப்பதாகவும் நிவாரணப்பணிகளை முடுக்கி விடாமல் ஸ்டிக்கர் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவதாக அமைச்சர்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அது போல ஒரு விஷயமாக கேரளாவில் சமீபத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்த நேரத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டில் நடந்தது போல் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பொருட்களில் கட்சி சின்னம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொடுப்பதும் மக்கள் பலரின் விமர்சனத்திக்குள்ளாகியுள்ளது.