பிக் பாஸ் வீட்டில் நேற்று புதிதாக குத்தாட்ட நாயகி சுஜா வந்துள்ளார். ஒவியா வெளியேறிய பின் இந்த நிகழ்ச்சி சற்றே டல்லடித்து வருகிறது. இந்த வீட்டில் எந்தவொரு விறுவிறுப்பான விஷயங்கள் நடக்காமல் மெல்ல நகருகிறது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவா்களுக்கு பிளவு ஏற்பட்டு வருகிறது. ஆள் ஆளுக்கு இரண்டு இரண்டு போ்களாக வலம் வருகின்றனா். ரைசா மற்றும் சினேகன் ஒன்றாக இருந்தனா். தற்போது யார் யார் பக்கம் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதுமட்டுமின்றி பிக்பாஸையே திட்டி விட்டு வருகிறாா். என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்று பிக்பாசியிடம் கூறுகிறாா் ரைசா.

யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக வந்து நின்று சமாதானப்படுத்துபவா் சினேகன் தான். இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் அவரை நான் அடிக்கப்போகிறேன் என்று பிந்து மாதவி கூறுகிறாா். என்ன தான் நடக்கிறது என்றே தொியவில்லை இந்த பிக் பாஸ் வீட்டில். பிந்து மாதவி கூறியதற்கு, வையாபுாி அப்படி எல்லாம் பேசகூடாது அவா் வயதில் பொியவா் என்று கூறுகிறாா். அதற்கு பிந்து மாதவி தவறுக்கும், வயதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஆவேசமாக கத்துகிறாா் பிந்து மாதவி. நடுவில் என்ன நடந்தது என்று நமக்கு தொியவில்லை. இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.