சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் கடந்த 2010ம் ஆண்டு வந்தது இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வந்தது.எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் இப்படத்தின் ஓப்பனிங் இருந்தது. அஜீத்,விஜய் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் இன்றுவரை சில முக்கிய தினங்களில் டிக்கெட் கிடைக்காத அளவு மிக வெற்றிகரமாக இரண்டு வாரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சி.எஸ் அமுதன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் அதில் உலகம் அதிரவைக்கும் பீனிக்ஸ் பறவைக்கு எங்களது வாழ்த்துக்கள் என அவர்கள் குடும்பத்தினர் எழுதி கேக் தயாரித்துள்ளனர்.

அவர மாதிரியே ஓவர் லொள்ளு பிடிச்ச குடும்பமா இருக்கும் போல என நாம் நினைத்து கொண்டிருக்கையிலே அவரும் என் குடும்பத்துக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி எனடுவிட் செய்துள்ளார்.