பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவரை அவரது ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்த பாஜகவினர் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் அராஜகம் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஹைகோர்ட்டையும் நீதிமன்றத்தையும் கீழ்த்தரமாக விமர்சித்து பேசினார். எங்கிருந்து அவருக்கு இவ்வளவு தைரியம் வந்தது. அவர்களால் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற திமிறு.

உரிமைக்காக போராடும் தலைவர்களை உடனடியாக கைது செய்யும் அரசாங்கம், எஸ்.வி சேகர் மீதோரெல்லாம் நடவடிக்கை எடுக்காததாலேயே இவர்கள் எல்லாம் இப்படி தைரியமாக பேசுகிறார்கள்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் கதிர், ‘பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே’ என்று கேள்வியை எழுப்பினார். இதனை கேட்ட தமிழிசை ஒன்றும் தெரியாதது போல் சிரித்தார். அந்த நபர் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை தொண்டர்கள் வயதனவர் என்றும் பாராமல் அந்த ஆட்டோ டிரைவரை கடுமையாக தாக்கினார்கள். கேள்வி கேட்பதே தவரென்றால் இது என்ன ஜனநாயகம் என அடியை வாங்கிக் கொண்டு அந்த நபர் புலம்பிக் கொண்டே அங்கிருந்து போனார்.