தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் திருச்செந்தூர் கோவில் அருகே கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அய்யாக்கண்ணு, அங்கு வந்த பக்தர்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தார். அதில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இருந்தது

இதையும் படிங்க பாஸ்-  சபாஷ்! அஜித்தை பாராட்டிய ஜெயக்குமார்...

இதனையடுத்து அங்கு வந்த பாஜக நிர்வாகி, கோவிலில் துண்டு பிரசுரங்களை கொடுக்க கூடாது என்று வாக்குவாதம் செய்தார். இதனால் இரு தரப்பினர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பாஜக பெண் நிர்வாகி, அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் பளாரென அறைந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.