பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை கீழ்த்தரமாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இந்த கீழ்த்தனமான பதிவைக் கண்ட அவருக்கு எதிராக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹெச். ராஜா கருத்துக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் இனிய தமிழ் மக்களே, நாக்கில் சனி பிடித்து, நாகரிகம் மறந்து பேசும் எச்.ராஜாவின் ட்விட்டர் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆறு முறை முதல்வராயிருந்த திராவிட இயக்கத்தின் சுயமரியாதை தலைவர், பெரியவர் கலைஞர் குடும்பத்தை இழி சொல்லால் இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது. தலைவர் கலைஞர் கைப்பிடித்த ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி உனக்கு தவறான உறவில் பிறந்தவரா? கேடு கெட்டவனே

சமீபத்தில் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனையை திசை திருப்பவே நீ நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறியுள்ளார்.