கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற்றாலும் மூக்குடைபட்டது போல ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதன் விரக்தியில் தமிழகம் வந்த பாஜகவின் வெற்றியை தட்டிச்சென்ற குமாரசாமிக்கு பாஜகவினர் கருப்புக்கொடி காட்ட முயன்றுள்ளனர்.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் மஜத, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. இந்நிலையில் நாளை மறுதினம் கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பாஜகவினர் அவரை சூழ்ந்துகொண்டு காவிரி நீர் பங்கீட்டில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு நல்ல தீர்வு கிடைக்க நான் முயற்சி செய்கிறேன் என குமாரசாமி பதிலளித்தார். அதன் பின்னர் அவர் வெளியே வந்தபோது உள்ளூர் பாஜகவினர் அவருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையவிடாமல் காங்கிரஸ் உடன் மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றிய விரக்தியில் பாஜக இப்படி நடந்துகொண்டதாக பேசப்படுகிறது.