மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை இழிவாக மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பிய பாஜக தொண்டரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மேற்கு வங்க போலிஸார்.

சமீபத்தில் நடந்த மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா வித்யாசமான ஆடை மற்றும் ஹேர்ஸ்டைலில் வலம் வந்தார். வித்யாசமான உடையில் இருந்த அவரது புகைப்படம் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் உருவாக்கியது. இதையடுத்து அடுத்தவரின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது அநாகரிகமானது எனவும் அவருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன.

இதையடுத்து அவரது ஆடை மற்றும் தலைமுடி ஸ்டைலை மற்றவர்களுக்கு வைத்து மார்பிங் செய்து பலப் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. தமிழ்நாட்டில் கூட வடிவேலு, யோகி பாபு, வீரப்பன் ஆகியோரின் புகைப்படங்கல் வெளியாகின. அதேப்போல மேற்கு வங்கத்தில்  பாஜக தொண்டர் பிரியங்கா சர்மா என்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இந்த புகைப்படத்தில் மார்ஃப் செய்து சமூக வலைதளங்களில் பரப்பினார்.

இதையடுத்து திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரியங்கா  சிறையில் அடைத்தனர். இது திருணாமூல் காங்கிரஸ் கட்சி மீதும் மம்தா மீதும் விமர்சனங்களை உருவாக்கியது. பிரியங்கா தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வெளியாக இருக்கிறது.