காதலிக்கும் இளைஞர்களுக்கு பெற்றோர் சம்மதம் இல்லாமல் அந்த பெண்ணை கடத்தி வந்த தருவதாக மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் புறநகரிலுள்ள காட்கோபூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜகவை சேர்ந்த ராம் கடம் என்ற எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். அப்போது, சில இளைஞர்கள் விரும்பிய பெண்கள் அவர்களை நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு 100 சதவீதம் எந்த உதவியும் செய்ய தயார் என்றார்.

மேலும் அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கடத்திவந்து யார் காதலிக்கிறாரோ அவரிடம் தருகிறேன் எனவும் கூறிய பாஜக எம்எல்ஏ தன்னுடைய மொபைல் நம்பரை அந்த கூட்டத்தில் இருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.

பெண்களை கடத்த உள்ளதாக பாஜக எம்எல்ஏ இப்படி பகிரங்கமாக கூறியுள்ளது மஹாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த எம்எல்ஏ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தனது கருத்துக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக அந்த எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார்.