பாஜக எம்.எல்.ஏவை பாஜக எம்.பி.சரத் திரிபாதி செருப்பால் அடித்த விவகாரம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் சந்த்கபிர் நகர் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பாஜக கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக எம்.பி.சரத் திரிபாதி, பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, அம்மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த கல்வெட்டில் அப்பகுதி எம்.எல்.ஏ ராகேஷ் சிங்கின் பெயர் விட்டுப்போனதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் சரத் திரிபாதியிடம் வாக்குவாதம் செய்தார். இதில் கோபமடைந்த திரிபாதி, காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி எம்.எல்.ஏவை அடிக்கத் தொடங்கினார்.

அதன் பின் எம்.எல்.ஏவும் திரிபாதியை தாக்க முயன்றார். ஆனால், அங்கிருந்த நிர்வாகிகளும், காவல் துறையினரும் இருவரையும் விலக்கி இழுந்து சென்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பலரும் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

இந்த வீடியோ பாஜகவின் மானத்தை கப்பலில் ஏற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக எம்.பி. சரத் திரிபாதி மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.