பாஜகவிற்கு ஆதரவாக ஆந்திராவில் பிரச்சாரம் செய்ய பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும், பாகுபலி மூலம் ரசிகர்கர்களையே அதிகம் பிரபலமானவர் பிரபாஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க பாஸ்-  தூக்கில் தொங்க தயாரா ? – மோடிக்கு மல்லிகார்ஜுனா கார்கே சவால் !

இந்நிலையில், அவரை பாஜக பக்கம் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஆந்திராவில் அவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் என பாஜக கருதுகிறது. இதை அவர் ஏற்றுக்கொண்டால் ஆந்திராவின் ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட வைக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக பிரபாஸின் மாமாவும், மூத்த நடிகருமான கிருஷ்ணாம் ராஜூவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தி கசிந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பாஜகவிற்கு 5 தொகுதிகள் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

பிரபாஸ் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.