நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. எனவே பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த வெற்றியால் நடிகை நமீதா மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகிய இருவரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். நமீதாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதும், ஸ்ரேயாவின் சொந்த மாநிலம் இமாச்சலபிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருவருமே கடந்த சில வருடங்களுக்கு முன் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது