Blog

விஷால் வீட்டில் இத்தனை கோடி ரூ.2000 நோட்டுக்களா? அதிர்ச்சி வீடியோ

விஷால் வீட்டில் இத்தனை கோடி ரூ.2000 நோட்டுக்களா? அதிர்ச்சி வீடியோ

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது தெரிந்ததே. அவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோவில் கோடிக்கணக்கான மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கள் ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதிகாரி ஒருவர் விஷாலை விசாரணை செய்வது போன்ற காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அந்த வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜூன் திடீரென வந்து அதிகாரி போல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவரை மேக்கப் போடாமல் இங்க என்ன வெட்டியா இருக்க? என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போதுதான் அது ஒரு செட்டப் வீடியோ என்பது தெரியவந்தது. விஷால், அர்ஜூன், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் வருமான வரி சோதனை போன்ற ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சிக்காக வைக்கப்
நயன்தாராவின் சிலையை நான் திறக்கிறேன்: இயக்குனர் வசந்தபாலன்

நயன்தாராவின் சிலையை நான் திறக்கிறேன்: இயக்குனர் வசந்தபாலன்

சற்றுமுன், செய்திகள்
கடந்த வாரம் வெளிவந்த நயன்தாராவின் 'அறம்' படத்தை பாராட்டதவர்களே இருக்க முடியாது. ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனந்தவிகடன் 60 மார்க் வழங்கி படத்தை கெளரவித்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக்கில் இந்த படத்தை பாராட்டி ஒரு நீண்ட பதிவை பதிவு செய்துள்ளார். அதில் நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறந்து வைக்க நான் வருகிறேன் என்று கூறியுள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பதிவு இதுதான்: நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் சினிமா என்னை கலங்கடித்துள்ளது. தன் முதல்படத்தில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக எத்தனை அல்பமான யோசனைகள் தோன்றும் என்பது எனக்கு தெரியும். அதை மீறி சமுதாயத்திற்கு தேவையான கருத்துடன் கூடிய கதையை தான் அழுத்தமாக முன் வைப்பேன் என்கிற திமிரோடு நெஞ்சில் நிஜ துணிச்சலோடு இயக்குநர் கோபி நயினார் தன் முதல் படத்தை நம் முன் ரத்த படையலாக்குகிறார். இற
கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ ஒன்றும், அதனையொட்டி அவர் பதிவு செய்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கமல் போஸ்டரை கத்தியால் குத்தும் காட்சியும், பின்னணியில் இவன் இந்து விரோதி அவனை விடாதே' என்ற குரலும் உள்ளது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.< இந்த டுவீட் புரியவில்லையா? கவல
3 நாட்களில் ரூ.6 கோடி: அசர வைக்கும் ‘அறம்’ வசூல்

3 நாட்களில் ரூ.6 கோடி: அசர வைக்கும் ‘அறம்’ வசூல்

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் என்பதை நடிப்பில் மட்டுமின்றி வசூலில் நிரூபித்துவிட்டார் நயன்தாரா 'அறம்' படத்தின் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது ஆம், 'அறம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் மூன்றே நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டை நெருங்கிவிட்டது. இந்த படம் சுமாராக இரண்டு வாரங்கள் ஓடும் என்று கணிக்கப்படுவதால் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டி.ஆர். எல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? பொங்கிய தன்ஷிகா

டி.ஆர். எல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? பொங்கிய தன்ஷிகா

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் 'விழித்திரு' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது தன்ஷிகாவை டி.ராஜேந்தர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கியதை அனைவரும் மறந்திருக்க முடியாது. ஒரு பெண் என்றும் பாராமல், தெரியமால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் தன்ஷிகாவை தொடர்ந்து டிஆர் அவமானப்படுத்தியதை திரையுலகினர் கண்டித்தனர். இந்த நிலையில் முதல்முறையாக இந்த விஷயம் குறித்து மனம் திறந்து பொங்கியெழுந்துள்ளார் தன்ஷிகா. சமீபத்தில் நடந்த 'விழித்திரு' திறனாய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து தன்ஷிகா கூறியதாவது, "டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார். எனக்கு அதிகமாகக் கோபம் வரும்
துபாயில் விஜய்-அட்லி: ‘தளபதி 63’ கதை விவாதமா?

துபாயில் விஜய்-அட்லி: ‘தளபதி 63’ கதை விவாதமா?

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி பாஜகவினர் புண்ணியத்தில் சூப்பர் ஹிட் ஆனது. ரூ.200 கோடிக்கும் அதிகமாக தமிழில் வசூல் செய்த இந்த படம் தெலுங்கிலும் தற்போது வெளியாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஈசிஆர் சாலையில் உள்ள விஜய்க்கு சொந்தமான பங்களாவில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. தற்போது மீண்டும் படக்குழுவினர் இரண்டாவது முறையாக வெற்றி விழாவை கொண்டாட துபாய் சென்றுள்ளனர். துபாய் கடற்கரையோர பகுதியில் விஜய், அட்லி மற்றும் படக்குழுவினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் துபாயில் அடுத்த படம் குறித்த கதை விவாதமும் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளதால் 'விஜய் 63' படத்தை மீண்டும் அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’

சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகில் ஓப்பனிங் வசூலாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் ஆவது பெரிய ஸ்டார்களின் படங்களாக மட்டுமே இருந்துள்ளது. இதுவரை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த படமும் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூல் பெற்றிராத நிலையில் முதல் முறையாக சென்னையில் நயன்தாராவின் 'அறம்' திரைப்படம் ரூ.1 கோடிக்கும் மேல் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,02,81,259 வசூல் செய்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் இதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நயன்தாரா நடிப்பில் 'அறம் 2' படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருப்பதியில் நமீதா திருமணம்: முழுவிபரம்

திருப்பதியில் நமீதா திருமணம்: முழுவிபரம்

சற்றுமுன், செய்திகள்
நடிகை நமீதா தன்னுடைய காதலர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன்னர் அவருடைய திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த திருமணம் வரும் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முன்னர் நவம்பர் 22ஆம் தேதி அதே திருப்பதியில் உள்ள ஒட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் கோலிவுட், டோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள நடிகர் கார்த்தி, நல்ல கதை அமைந்தால் விரைவில் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன. ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என
விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது ஓடி ஒளிந்தது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி

விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது ஓடி ஒளிந்தது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் திரையுலகினர் மத்தியில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகர் சரத்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சிங்கம் குகையில் இல்லாத போது கமல், அரசியல் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சரத்குமார், விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது ஓடி ஒளிந்தது ஏன்? என்றும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். மேலும், 'கருத்துக்களை கூறிவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஓடி ஒளிந்து கொள்பவன் நான் இல்லை' என்றும் அவர் கூறியுள்ள சரத்குமார், அரசியலில் கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.