Blue Satta Maaran NKP Review – நேர்கொண்ட பார்வை படத்தை ப்ளூசட்டமாறன் விமர்சனம் செய்த விதத்திற்கு நெட்டிசன்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெண்களின் சுய விருப்பம் மற்றும் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.

ஆனால், தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் ப்ளூ சட்டமாறன் இப்படத்தை வழக்கம் போல் மிகவும் கிண்டலடித்து விமர்சித்தார். இப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறியிருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் கொதிப்படைந்து அவரை கண்டபடி திட்டி கருத்துகளை கூறி வருகின்றனர். அதோடு, நடிகர், நடிகைகளும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவரின் நேர்கொண்ட பார்வை விமர்சன யுடியூப் வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதில், 35 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். ஆனால், 62 ஆயிரம் பேர் டிஸ் லைக் (பிடிக்கவில்லை) செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.