பிரபல பாப் பாடகர் ஒருவர் பாடிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடல் புகழ்பெற்றதன் மூலம் கிகி சேலஞ்ச் என்ற ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

மக்களும் பாலிவுட், டோலிவுட்,கோலிவுட் பிரபலங்களும் இது போல ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. சமீபமாக நடிகை ரெஜினா கூட இது போல டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  முதன் முறை ஜெய் பாடகராக ஜருகண்டி படத்தில் அறிமுகம்

பாலிவுட் நடிகை அடா சர்மாவும் இது போல கிகி சேலஞ்சில் ஈடுபட்டார் இது போல நிகழ்வுகள் கூடாது என டில்லி, உபி, மத்திய பிரதேச மாநில போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

ஏனென்றால் சும்மாவே நம்ம ஊரில் சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை இது போல சேலஞ்ச்களால் மக்கள் உயிரோடு விளையாடும் நிலை ஏற்படும். ஏதாவது ஒரு ஆபத்து நேர்ந்தால் அதை செய்பவருக்கும் எதிரில் வருபவருக்கும் பெரும் சேதம் ஏற்பட்டு உயிர்ப்பழி உண்டாகும்.

இதையும் படிங்க பாஸ்-  சிம்புவின் மாநாடு படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர் !

இது போல சேலஞ்சுகளை நடிகர் நடிகைகள் பிரபலங்கள் செய்யாமல் இருந்தாலே மற்றவர்கள் செய்யாமல் இருப்பர் என்பது பொதுமக்களின் கருத்து.