இயக்குனர் ஹரி இயக்கும் சாமி2 படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரின் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி. இப்படத்தில் நடிகர் கோட்டா சீனிவாஸ், பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் மெயின் வில்லனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாபிசிம்ஹா “இப்படத்தில் வில்லன் வேடத்தில் நான் நடிப்பது உண்மைதான். இதுபோன்ற வில்லனை இதுவரை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். சாமி முதல் பாகத்தில் இடம்பெற்ற பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தை விட எனது கதாபாத்திரம் பத்து மடங்கு பெரியது. இந்த படத்தில் நடிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அவர் கூறியிருக்கிறார்.