சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜினியுடன் முதன்முறையாக சிம்ரன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஒருசில படங்களில் நடித்தவரும் தேசிய விருது பெற்றவருமான பாபிசிம்ஹா இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், அதேபோல் கார்த்திக் சுப்புராஜின் ‘மெரிக்குரி’ படத்தில் நடித்தா சனாத்ரெட்டியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தில் மேலும் சில முன்னணி நடிகர், நடிகையர் நடிக்கவுள்ளதாகவும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது