ஜிகர்தண்டா, கோ 2 , திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் கதாநாயகன்,குணச்சித்திரம், வில்லன் என எந்த ரோல்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் பாபி சிம்ஹா, இவர் நேற்று முன் தினம் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இவரது நண்பர் கருணாவுடன் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஒரு கதை விவாதம் தொடர்பாக மது போதையில் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்கிய ஹோட்டல் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் இருவரும் பேசியதால் போலிசுக்கு தகவல் சொல்லப்பட்டது.

ஹோட்டலுக்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் கடுமையாக எச்சரித்து அவரவர்கள் காரில் டிரைவருடன் அனுப்பி வைத்தனர்.