ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் மறுப்பு  தெரிவித்துள்ளார்.

 

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இந்தியன்’.  இப்படத்தில் உலக நாயகன் இரு வேடங்களில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் 2-ஆம் பாகத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம்  தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது.மேலும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

‘இந்தியன்’ முதல் பாகத்தில் சி.பி.ஐ-ஆக நடித்த நெடுமுடி வேணு அதே கதாபாத்திரத்தில் (கிருஷ்ணசுவாமி) நடிக்கவுள்ளார். ரவி வரிமன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து, ஜெயமோகன், லஷ்மி சரவணக்குமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள்.ராக் ஸ்டார் அனிருத் இசையமைகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் ரோலில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவகனை அனுகியது படக்குழு.ஆனால் அவர் சில பல காரணங்கள் கூறி ஷங்கர் படத்தை நிராகரித்து விட்டார்.குறிப்பாக அஜய் தேவகன் தற்போது ராஜ மௌலி இயக்கும் புதிய படத்தில் கமிட்டாக உள்ளதால் தான் ஷங்கர் படத்தை நிராகரித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அஜய் தேவகன் தமிழில் ஹிட்டான சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.