நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டுப்
பிள்ளை’ படம் மூலம் அறிமுகமானவர். இவர் ஹிந்தியில்
ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா, தனியார் தொலைக்காட்சி
ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ‘கடந்த 2009-ம்
ஆண்டு என் நடிப்பில் வெளியான ‘ஹார்ன் ஓகே பிளீஸ்’
படத்தின் ஷூட்டிங்கின் போது, நானா படேகர் என்னிடம்
தவறாக நடந்து கொண்டார்’ எனக் கூறினார்.

நடிகை தனுஸ்ரீ த்ததாவின் இந்த குற்ச்சாட்டு பாலிவுட்
வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பாலிவுட்டில் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவும்,
எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சோனம்
கபூர் தனது டிவிட்டர் பதிவில்,

“தனுஸ்ரீ கூறுவது உண்மையோ, பொய்யோ. ஆனால்
எங்களைப் பொருத்தவரை அவருக்கு ஆதரவாக இருக்க
வேண்டும். படப்பிடிப்பின் போது பலரும் பாலியல்
தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். அனைவரும் இது குறித்து
கூறுவது இல்லை. அவர்களை பேச வைக்க வேண்டும்.
அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும்” கூறியுள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது டிவிட்டர்
பக்கத்தில், தனுஸ்ரீ கூறுவதை உலகம் நம்பவேண்டும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.