இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த தயாரிப்பாளர்…

12:50 மணி

Loading...

சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற பெண்ணை மயக்க மருந்து கொடுத்த பலமுறை கற்பழித்த பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் மீது 25 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், சினிமா வாய்ப்பிற்காக அவரை சந்தித்த போது, தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, மொரானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்தார் மொரானி. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com