அஜித்தை வைத்து வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருப்பதாக வந்த தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் முன் வந்தார். வழக்கத்திற்கு மாறாக படப்பிடிப்பு பணிகள் சீக்கிரமே முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் ஒரு படத்தில் அஜித் ஹெச் வினோத் இயக்கத்திலேயே போனி கபூர் படத்தில் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது வரிசையாக இப்போது மீண்டும் ஒருப் படம் என மொத்தமாக 3 படங்களில் போனிக் கபூர் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த 3 படங்களுக்கும் சேர்த்து அஜித்துக்கு 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதை மறுத்த போனி கபூர் ‘3 படங்களில் அஜித்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி உண்மையில்லை. நே கொ பா –க்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேம். மேலும் அவர் இந்தியில் ஒருப் படம் நடிக்க வேண்டுமென நான் கூறியுள்ளேன். ஆனால் அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.