லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் பிரபல தமிழ் முன்னணி நடிகை நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைப்படம் வியாழக்கிழமை மாலை தமிழகத்தில் வெளியானது. இந்த படத்தின் வசூல் மந்தமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா. அவரது படம் வெளியானாலே தியேட்டரில் கூட்டம் அலைமோதும். நயன்தாரா நடித்தாலே படம் ஹிட் தான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது அவரது வளர்ச்சி. இந்நிலையில் போன வாரம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகில வெளியானது. அதற்கு போட்டியாக அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படமே வெளியாகியுள்ளது.

இரண்டு படங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றாலும் சில மாறுபட்ட விமர்சனத்தால் இமைக்கா நொடிகள் திரைப்படத்தால் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் வசூலை முந்த முடியவில்லை. அதன் கிட்டவே நெருங்க முடியவில்லை.

போன வாரம் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் நேற்றைய மொத்த வசூல் 1.80 கோடி ரூபாய். ஆனால் தற்போது தான் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் வசூல் 1.40 கோடி ரூபாய் மட்டுமே. அந்த வகையில் கோலமாவு கோகிலா நயன்தாரா இந்த வசூல் ரேஸில் முந்திவிட்டார்.

Loading...