Connect with us

செய்திகள்

காதலியை சரமாரியாக வெட்டிவிட்டு ரயிலில் பாய்ந்த காதலர் – சென்னையில் அதிர்ச்சி

Published

on

Girl attacked with knife – சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அவரின் காதலர் அரிவாளால் வெட்டிவிட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தேன்மொழி(26). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எழும்பூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி உள்ளார். இவரும் ஈரோட்டை சேன்ற சுரேந்தர்(27) என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். சுரேந்தர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் சத்தம் போட்டு கத்திக் கொண்டர். சரியாக இரவு 7.50 மணியளவில் சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். அவரை கீழே தள்ளியும் வெட்டினார். இதில், தேன்மொழியின் தாடை, கன்னம், கழுத்து மற்றும் கை பகுதியிலும் வெட்டுக்காயம் விழுந்தது. எனவே, ரத்த வெள்ளத்தில் அவர் அலறினார்.

அப்போது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்தது. அதைக்கண்ட சுரேந்தர் அரிவாளை கீழே போட்டு விட்டு ரயில் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், ரயில் வேகமாக சென்றுவிட்டதால் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி அவர் பலத்த காயத்தோடு தூக்கி வீசப்பட்டார். எனவே, அவரும் பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவங்களை கண்ட ரயில் பயணிகள் அலறியடித்து ஓடினர். சிலர் தேன்மொழிக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, போலீசார் அங்கு விரைந்து தேன்மொழியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார். அவருக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை.

சிகிச்சை முடிந்து அவர்கள் உடல் நலம் தேறியபின் அவர்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்பே சுரேந்தர் ஏன் தேன்மொழியை வெட்டினார் என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். தேன்மொழியை சந்திக்க அரிவாளுடன் வந்ததால், அவரை வெட்டிக் கொலை செய்யும் எண்ணத்தோடே சுரேந்திர் வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண் கொடுமையாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். தற்போது சேத்துப்பட்டில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், சம்பவம் நடத்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போலவே, சேத்துப்பட்டிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rithvika
செய்திகள்22 mins ago

அந்த நடிகர் மீதுதான் எனக்கு கிரஷ் – நடிகை ரித்விகா ஓப்பன் டாக்

rangaraj
அரசியல்35 mins ago

ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

nithiyana
செய்திகள்1 hour ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்2 hours ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்2 hours ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்3 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்3 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

ஜோதிடம்7 hours ago

இன்றைய ராசிபலன்கள் 10.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending