நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடத்து வெளிவர உள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படம் வரும் 7-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக சிக்கல் உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தா தமிழ்நாடு சுடுகாடா மாறிடும் என சாபமிட்டார். மேலும் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என கூறினார்.

ரஜினியின் இந்த கருத்து தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் காலா திரைப்படத்தை இந்த காரணத்துக்காக புறக்கணிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக gopetition.com என்ற தளத்தின் மூலம் நான் தமிழனாக இருப்பதால் காலா திரைப்படத்தை பார்க்க மாட்டேன் என ஆன்லைன் ஃபார்ம் ஒன்றை உருவாக்கி அதனை பலருக்கும் அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் ரஜினியின் காலா திரைப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.