சின்னத்திரையில் நடித்த நடிகைகள் தற்போது புதிய வரவால் காணாமல் போய் விடுகிறார்கள். சின்த்திரையிலிருந்து விலகி பிசினஸ் என்று செட்டிலாகி விடுகின்றனா். அந்த வகையில் நம்ம கோலங்கள் புகழ் ஸ்ரீவித்யா தற்போது சமையல் தொழில் களம் இறங்கியுள்ளார்.

தேவயானி நடித்து மிகவும் பிரபலமான சீரியல் கோலங்கள். இந்த சீரியல் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீவித்யா. இவர் குழந்தை நட்சத்திரமாகவும் ஜொலித்தவா். தன்னுடைய ஏழு வயதிலிருந்து நடித்து வருகிறார். அதுபோல வெள்ளித்திரையிலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்திலும் நடித்திருக்கிறார். பல சீரியல்களில் நடித்து மிரட்டிய இவா் திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் சீரியலுக்கு பிரேக் விட்டிருந்தார். ஐந்து வயது மகனுடன் செட்டிலான ஸ்ரீவித்யா பிறகு சிறிது இடைவெளிக்கு பின் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் என்ற சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவரது கணவா் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாராம்.

இந்நிலையில் இவா் பிசினஸ் மேனாக களம் இறங்க இருக்கிறாராம். நடிப்புக்கு ஒரேயடியாக முழுக்கு போட்டு விட்டு கிளவுட் கிச்சன் என்ற தொழிலை நடத்த தொடங்கியிருக்கிறாராம். அந்த பிசினஸ் என்னவென்றால் சொந்த ஊரை விட்டு தனியாக வந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பேச்சிலர்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொடுப்பதாம். எம்.பி.ஏ படித்துள்ள இவா் முழு நேர பிசினஸில் இறங்க உள்ளாராம். அதனால் சீரியல் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை. எதிர் காலத்தில் இயக்குனராக பணியாற்றும் எண்ணம் இருப்பதாக கூறியிருக்கிறார்.