சிவகார்த்திகேயன் தற்போது ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், அதற்கு பதிலாக எம்.ராஜேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு எம்.ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்திலும் சிவகார்த்திகேயான் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.