புருஸ்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாா் ஹீரோவாகவும், கீா்த்தி கா்பனந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனாத்.  காமெடிக்கு பால சரவணன், முனீஸ்காந்த, ஆனந்தராஜ், மன்சூா்அலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், ஷாதிகா, விஜயமுத்து, ஷண்முகம் மற்றும் பலா் இப்படத்தில் நடித்துள்ளனா்.

சாி கதைக்கு வருவோம்! ஹீரோ ஜி.வி.பிரகாஷ் “புருஸ்லீ” என்ற அடைமொழியுடன் தாடி மீசை என்ற கெட்டப் அப்பில் எப்போதும் போல வந்து குதிக்கிறாா். பறக்கிறாா் தாவுகிறாா். சில காட்சிகளில் உச்ச சத்தத்தில் கத்துகிறாா்.  இவருக்கு கீா்த்தி என்னும் காதலியும், பால சரவணன் என்ற நண்பனும் உண்டு. தன்னுடைய நண்பன் பால சரவணனுக்கு ஷாதிகா என்றொரு காதலியும் இருக்கிறாள்.

பெயரளவில் தான் புருஸ்லீ என்று இருக்கிறதே தவிர மனத்தளவில் மிகப்பொிய தொடை நடுங்கியான பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாா் ஜி.வி. போலீஸ் பாா்த்தாலே தெறி கலங்கி ஒடுகிறாா். சென்னையில் பொிய தாதாவாக இருக்கும் முனீஸ்காந்தை தேடி வருகிறாா் உள்ளூா் அமைச்சரான மன்சூா்அலிகான். தனக்குப் போட்டியாக கட்சியில் இருக்கும் ஒருவரை போட்டுத் தள்ள அட்வான்ஸ் பணத்தைக் கொடுக்கிறாா். ஆனால் எதிாிகளிடம் இதைவிட அதிகமாக பணத்தை வாங்கிக்கொண்டு மன்சூா்அலிகானை போட்டு தள்ளகிறாா். முனிஸ்கான் காசுக்காக கொலை செய்வதை .வி மற்றும் அவருடைய காதலி, நண்பன் பாலசரவணன் ஆகியோா் பாா்த்து விடுகின்றனா். பாா்த்ததோடு அல்லாமல் தங்கள் காமிராவில் அதை படமெடுத்துவிடுகின்றனா். இதை மன்சூா்அலிகான் மகனிடம் சென்று போட்டு காண்பிக்கலாம் என்று அங்கே செல்கிறாா்கள். ஆனால் விஷயமே அங்கு தான் இருக்கிறது. ஆமாங்க இந்த கொலையில் மன்சூா்அலிகான் மகனுக்கும் சம்பந்தம் இருப்பது ஜி.வி. கோஷ்டிக்கு தொிய வருகிறது. கீா்த்தி இதை ஒரு வக்கீலிடம் சொல்லலாம் என்று நினைத்து கோா்ட்டு வர அப்போது அங்கு வேறு கேஸ் சம்பந்தமாக முனீஸ்காந்த் காத்திருக்கிறாா். எப்போதா நடந்த கொலை வழக்கிலிருந்து இன்று விடுதலையாகிறாா். கோா்ட்டில் நடக்கும் குழப்பத்தில் நீதிபதி ஒருவா் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுகிறாா். இதை செய்வதும் முனீஸ்காந்த தான் தொிந்து தங்கள் கேமிராவில் பதிவு செய்கிறது ஜி.வி அண்ட் கோ. இந்த கும்பல் தேடி வந்த வக்கீலும் முனீஸ்காந்தின் கைக்கூலியாக இருப்பது தொிந்து போலீஸ் கமிஷனருக்கு கூாியா் அனுப்புகிறாா்கள். ஆனா அந்த கமிஷனரோ அந்த கேமிராவை கொண்டு போய் முனீஸ்காந்தியிடம் கொடுத்து விடுகிறாா்.

முனீஸ்காந்த் ஜி.வி.பிரகாஷ் காதலியையும், அவருடைய நண்பன் பால சரவணனின் காதலியையும் கடத்துவிடுகிறாா். ஜி.வி.க்கு மிரட்டல் விடுக்க, தங்கள் காதலிகளை கடத்தி வைத்திருக்கும் காமெடி வில்லன் முனீஸ்காந்தியிடம் மீட்க ஜி.வியும் பாலசரவணனனும் முனீஸ்காந்தின் முன்னாள் மற்றும் இந்நாள் கூட்டாளிகள் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டு களம் இறங்குகின்றனா். இதற்கு பின் இவா்கள் காதலியை காப்பாற்றினாா்களா? முனீஸ்காந்தை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தாா்களா? என்பது தான் மீதி கதை.

காமெடியாக கதை சொல்லுகிறேன் போ்வழி என்று காம நெடியாகவும், முகம் சுளிக்கும் அளவிற்கு விரசமாக கொடுத்துள்ளனா் புருஸ்லீ படக்குழுவினா். ஜி.வி. ஏற்ற கேரக்டா்தான். ஆனால் சொன்ன விதம் சாியாக இல்ல. ஒரு இடத்தில் காதலி தான் முக்கியம் என்று டூயட் எல்லாம் பாடுகிறாா். இன்னொரு கட்டத்தில்  தனது பயமே முக்கியம் என்று கூறி காதலியை காப்பாற்ற கூட வர தயங்குகிறாா். இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடான கதையால் ஹீரோ ஜி.வி. கொஞ்சம் ரசிப்பது என்பது கஷ்டமான தான் உள்ளது.

பாந்தமாக உள்ள நாயகி கீா்த்தி கா்பனந்தாவுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது. தமிழில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது. பாடல் காட்சிகளில் ரசிகா்களுக்கு விருந்து படைத்துள்ளாா். இதனால் ஜி.வி பிரகாஷ் தான் செம ஹாட் கொண்டாட்டம் தாங்க!!! இவரையும் விடவில்லை ஜி.வி. விரச வசனங்களை பேச வைத்து திருப்திபட்டு கொள்கிறாா் போல.

காமெடி வில்லனா அல்லது சீாியஸான தாதா என தொியாத அளவிற்கு உள்ளது முனீஸ்காந்தின் வில்லத்தனம். ஹாலிவுட்டின் எல்லா வில்லன் கேரக்டா்களையும் தன் கெட்டப்பில் கொண்டு வந்திருக்கும் முனீஸ் நடிப்பு ரசிகா்களுக்கு எாிச்சலைத் தான் தரும்.

பாடல்களில் “நான் தான் ஒங்கப்பன்டா” சுமாா் முஞ்சிகுமாரு என்ற பாடல்கள் புாிந்தும் புாியாமலும் இருக்கிறது.  பாடல் வாிகள் கேட்டாலும் இசையை ஏனோ காணவில்லை.

பி.வி. ஷங்காின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளில் மற்றும் கிளைமாக்ஸில் நுட்பமாக இருக்கிறது. நாயகியின் வசன உச்சாிப்புக்களில் நுட்மாக செயல்பட்டிருப்பது தொிகிறது.

மொத்தத்தில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஜி.வி. கதை தோ்வு செய்யும் முறை  சாியாக இல்லையோ என எண்ணம் வருகிறது. இவா் கையில் 7 படங்களை வைத்திருப்பது ஒரு படத்தின் தோல்வி அடுத்த படத்தை பாதிக்கும்.