அஜித்துடன் பில்லா 2 படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டலாக நடித்தவர் புரூனா அப்துல்லா. தமிழ் படங்கள் மற்றும் இன்றி ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிராண்ட் மஸ்தி, ஜெய்ஹோ என இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அல் என்பவருடன் சில காலங்களாக நெருங்கி பழகி வந்தார் புரூனா அப்துல்லா. இருவரும் ஜோடியாக வெளிநாடுகளில் சுற்றிவந்தனர்.இந்நிலையில் காதலி புரூனாவிடம் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் காதலர் அல். எப்படி என்றால் சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதிக்கு புரூனாவை அழைத்துச்சென்றுள்ளார். அங்கு முட்டி போட்டபடி, அன்பே, ஆருயிரே என உருகி தனது காதலை சொல்லி கையில் மோதிரத்தை அணிவித்து நிச்சயார்த்தம் செய்துள்ளார். இதனை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்த புரூனா முகத்தை பொத்தியபடி வெக்கத்தில் குறுகிப்போனாராம்.
இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
நிச்சயதார்த்தம் நடந்த இந்த வீடியோவை புரூனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எனது வாழ்க்கையில் இன்று சிறந்த நாள். இந்த மனிதரை நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை அவர் இளவரசி மாதிரி பார்த்துக் கொள்வார். இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண்ணாக என்னை உணர்கிறேன். இந்த வியப்பான நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
going for a walk …but this happened… ❤️💍 . . . #thebestdayofmylife #underthematterhorn #zermatt #switzerland #youandi #forevermine #iloveyou @alfromscotland
A post
shared by
Bruna Abdullah (@brunaabdullah) on
PDT