Connect with us

செய்திகள்

பி.எஸ்.என்.எல்-ஐ காலி செய்த ஜியோ : விரைவில் மூடுவிழா?

Published

on

ஜியோ மற்றும் மற்ற நெட்வொர்க்குகளோடு போட்டி போட முடியாமல் திணறி வரும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகிறது.

தனியார் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் அரசு நிறுவனங்கள் முழிப்பது காலம் காலமாக நடந்து வரும் விஷயம்தான். இதில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கும் ஒன்று. கடந்த 2016-17ம் ஆண்டில்தான் ஜியோ அறிமுகமாகியது. அது முதலே பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. 2016-17ம் ஆண்டில் மட்டும் பி.எஸ்.என்.எல் ரூ.4,793 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

மற்ற நிறுவனங்களை போலவே பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கும் மொபைல், லேண்ட்லைன், பிராட்பேண்ட் என அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. ஆனால், இன்னும் 2ஜி, 3ஜி-யை தாண்டி வரவில்லை. ஆனால், மற்ற நெட்வொர்க்குகள் 4ஜி, 5ஜி-க்கு மாறிவிட்டன. எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் போட்டியை சமாளிக்க முடியவில்லை.

எனவே, மற்ற நெட்வொர்க்குகளின் போட்டியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்கிற ஆய்வில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் இறங்கியுள்ளது. குறிப்பாக, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடி விட்டால் என்ன என்கிற யோசனையும் மத்திய அரசுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி உயர் அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending