சிவகார்த்திகேயனின் படங்கள் ஆரம்பத்தில் காமெடி கலந்து வந்தது. குழந்தைகள் பெரியவர்கள் என இவரின் ரசிகர்கள் அதிகமானதால் இவருக்கு பட வாய்ப்பும் அதிகமானது. பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க அவரின் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது.

கடந்த  3ம் தேதி இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியானது.

படத்தின் டிரெய்லர், மற்றும் பில்டப் பாடல்களை வைத்து பார்க்கும் விஜய், அஜீத், ரஜினிகாந்தின் ஓப்பனிங் பாடல்கள் போலவும் காட்சிகளும் இவர்கள் படத்தின் சண்டைக்காட்சிகள் போல அமைக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது இவர் முதல் இடத்தை பிடிக்க முன்னேறி செல்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.