கிரிக்கெட் வீரர் பும்ரா நடிகை அனுபமா பரமேஸ்வரனை டிவிட்டரில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

யாக்கர் மன்ன என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும், நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையே காதல் இருப்பதாக சமீபத்தில் கிசுகிசு பரவியது.

டிவிட்டரில் அனுபமாவை பும்ரா பின் தொடர்ந்து வந்தார். அதேபோல், அவரை அனுபமா பின் தொடர்ந்து வருகிறார். சில சமயங்களில் இருவரும் வாழ்த்துக்களை தெரிவிப்பதும், நன்றி தெரிவிப்பதுமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பும்ரா தனக்கு நண்பர் மட்டுமே என அனுபமா தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அனுபமாவின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்வதை பும்ரா நிறுத்தியுள்ளார். அனுபமவாவை சேர்த்து இதுவரை 25 பேரை அவர் பின் தொடர்ந்து வந்தார். தற்போது 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், அனுபமா பும்ராவை பின் தொடர்வதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கவே பும்ரா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.