கள்ளக்காதலி தன்னோடு சேர்ந்த வாழ மறுத்ததால் விமானக் கடத்தல் நாடகம் போட்ட தொழிலதிபர் பிர்ஜு சல்லாவுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் மும்பையிலிருந்து டெல்லிக்கு செல்லும் ஜெட் விமானத்தில் பயணித்தார். அப்போது, அந்த விமானத்தை கடத்த உள்ளதாக கழிவறையில் அவர் ஒரு கடித்தை எழுதி வைத்தார். அக்கடிதத்தில், விமானத்தில் 12 கடத்தல்காரர்கள் இருப்பதாகவும், பல்வேறு வெடிபொருட்கள் இருப்பதாகவும் எழுதியிருந்தது. அதனால், விமானத்தை உடனடியாக பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீருக்கு திருப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தொழிலதிபரின் இந்த செயலைக் கண்டுபிடித்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவருக்குக் கல்யாணம் ஆகியிருந்தால் விமானத்தில் பணிபுரிந்த அவரது மற்றொரு காதலி அவருடன் வசிக்க மறுத்ததால் அந்தப் பெண்ணின் வேலைப் பறிபோகச் செய்வதற்காகவும் அவர் தன்னுடன் வந்து வாழ்வதற்காகவும் இந்த செயலை செய்ததாகக் கூறினார்.

அது சம்மந்தமான வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.