தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள  22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாடே கடந்த இரண்டு நாட்களாக மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி விவாதம் செய்து வருகின்றது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள அதே வேளையில் தமிழத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா என்ற கேள்வியும் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மானம், கௌரவம் எல்லாத்தையும் இழந்து எடப்பாடியின் கைகளை பிடித்து கெஞ்சினேன்: ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தததை அடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  இந்நிலையில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க பாஸ்-  உதயநிதி பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாக கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை

இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் அமமுக, மநீம, நாதக போன்ற கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - திருச்சி சிவா ஆவேசம்

இதனால் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.