பாஜக வோடு கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம் என அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாஜக 303  இடங்களில் வென்று தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு பாஜகதான் காரணம் என அதிமுகவும், அதிமுகதான் காரணம் என பாஜகவும் மாறி மாறிக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  பாஜக அரசை கிண்டல் செய்த ரம்யா

இந்நிலையில் பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், ’தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்திருந்தால் 5 இடங்களிலும் 4 முதல் 5 லட்சம் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் இது யாருக்கு எதிரான அலை?’  என கேள்வி எழுப்பினார். குருமூர்த்தியின் அந்த டிவிட் தமிழகத்தில் தோல்விக்குக் காரணம் அதிமுக தான் என்பது போல இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் ; காய் நகர்த்தும் ஓ.பி.எஸ் : கலக்கத்தில் பழனிச்சாமி

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ’பாஜகவால்தான் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்தது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இது குறித்து நேற்று சி வி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபபோது.‘. பாஜக, தமிழகத்துக்கு எதிரானக் கட்சி என்ற பிம்பத்தை திமுகவும் சில் ஊடகங்களும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உருவாக்கி வந்தன. அதைப் பாஜக சரியாக எதிர்கொள்ளவில்லை. அதனால் தான்  நாடு முழுவதும் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியை நழுவ நேரிட்டது என்றுதான் கூறினேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.