என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? கோபத்தில் எகிறிய ஸ்ரீரெட்டி

sri reddy

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிரச்சியடைய வைத்த ஸ்ரீரெட்டி தற்போது கோலிவுட்டின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்.

இதனால் தமிழ் திரையுலகமும் கலக்கத்தில் இருக்கிறது. ஸ்ரீரெட்டி எப்போது என்ன குண்டை தூக்கி போட போகிறார் என்ற கலக்கத்திலும் பயத்திலும் கோலிவுட் திரையுலகம் இருக்கிறது. ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் முதலில் வந்தவர் இயக்குநர் முருகதாஸ் பின் அவரை தொடர்ந்து ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் சுந்தர். சி. என பட்டியல் நீண்டே கொண்டே போகிறது. இவர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு படவாய்ப்பு ஏதும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் ஸ்ரீரெட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் மட்டும் ராகவா லாரன்ஸிடம் ஏமாறவில்லை. எனக்கு நன்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இந்த மாதிரியான பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும் என மிரட்டும் தொனியில் பேசினார்.

sr

பேட்டி எடுத்த அந்த யூடியூப் சேனல், அதற்கு என்ன ஆதாரம்? இருக்கிறது என்ற கேள்வி ஸ்ரீரெட்டியிடம் கேட்டது. இதை கேட்டு கோபத்தில் ஸ்ரீரெட்டி நான் என்ன எப்போதும் என் அந்தரங்க உறுப்பிலோ இல்லை மார்பிலோ கேமரா வைத்து கொண்டே இருக்க முடியுமா? இல்லாவிட்டால் ஒரு பெண் எப்போதும் கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டே இருப்பாளா? அப்படி என்னுடன் ராகவா லாரன்ஸ் இருக்கும் போது நான் செல்பி எடுக்க முடியுமா? அல்லது அப்படி செல்பி எடுப்பதை அவர் அனுமதிப்பாரா?” என அவர் அடுக்கடுக்காய் கேள்விகணைகளை தொடுத்து அதிர்ச்சி அடைய வைத்துவிட்டார்.

பல ஆதாரங்களை இதற்கு முன் நான் வெளியிட்டேன். அதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கோபத்தில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.