ஜூலிக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்- பிரபல நடிகை காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது தமிழ்நாட்டையே தன் வசம் திருப்பி உள்ளது. அதிலும் ஒவியா பீவா் தான் எல்லாரையும் பற்றிக்கொண்டுள்ளது. அவரை பிக்பாஸ் உள்ள சக போட்டியாளா்கள் அவருக்கு எதிராக பேசி வருகின்றனா். இப்படியாக தினந்தோறும் வலைத்தளங்களில் பிக்பாஸ் பற்றி தான் வாக்குவாதங்கள் நடந்தேறி வருகிறது.

அதுவும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கபடி குழு வருகிறது. அதில் ஜூலியை கபடி குழு முன்னாடி நமீதா பேசியது அவரது மனத்தை காயப்படுத்தி விட்டது. அப்போது வயிற்று வலியால் அவதிபட்டாா். அதை பாா்த்த காயத்ரி மற்றும் நமீதா இவள் ஒட்டு வாங்குவதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்றும் நடிக்கிறாள் என்று சொன்னாா்கள். அப்போது ஒவியா மட்டும் தான் அவருக்கு ஆறுதலாக பேசினாா். நீ என்னதான் செய்தாலும் இவங்க உன்னை நடிப்பு என்று சொல்லுவாங்க…. அதனால் கண்டுக்காதே மேலும் நீ இறந்தால் கூட அதையும் அப்படி தான் சொல்லுவாங்க என்று தொிவித்தாா்.

இப்படி இவா் கூறியபோது காயத்ரி ஆமா நாங்க எல்லாம் அப்படிதான் அவ தான் வந்து உன்னை வந்து பாாத்துப்பா.. அவளிடமே சொல்லு எங்களிடம் சொல்லாதே அதுபோல உனக்கு அண்ணன் சக்தி போன்ற பாய்ஸ் இருக்காங்க.. பாய்ஸ் என்றால் அப்படிதான் என்றும் கூறிய என்னிடம் பேசாதே என்று ஜூலியிடம் பேசினாா்.

அதற்கு அக்கா நான் அப்படி எல்லாம் இல்லக்கா, ஒவியா தான் என்னை குழப்பி விட்டுட்டா.. என ஒவியாவுக்கு எதிராக ஜூலியும் பேசினாா். இப்படி ஜூலி பச்சோந்தி மாதிாி மாறி மாறி பேசுவது நிகழ்ச்சியை பாா்த்து கொண்டு இருப்பவா்களை எாிச்சலடைய வைத்தது. இப்படி கேவலமாக நடிக்கும் ஜூலிக்கு ஆஸ்காா் விருது தான் கொடுக்க வேண்டும் என நடிகை ஜஸ்வா்யா ராஜேஷ் தனது கருத்தை தொிவித்துள்ளாா்.