காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் மிக மோசமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளார்.

மெட்டாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி தனது மகன் ரன்வீரிடம் தனக்கு புற்றுநோய் இருந்ததை தயக்கத்துடன் தெரிவித்ததை பற்றி கூறியுள்ளார்.

சில நேரங்களில் எதிர்பார்க்காத வகையில் வாழ்க்கை உங்களை புரட்டிப்போடும். 12 வருடங்கள்,11 மாதங்கள், எட்டு நாட்களுக்கு முன்னர் பிறந்த போதே என் மகன் என் இதயத்தை எடுத்து கொண்டான்.

அப்போதிருந்து அவனின் சந்தோஷமும் நலனும்தான் எங்களுக்கு முக்கியம், புற்றுநோய் வந்தபோது அதை எப்படி அவனுக்கு விளக்கி கூறுவது என்பது கஷ்டமாய் இருந்தது. எந்த அளவு அவனை பாதுகாக்கிறோமோ அதே அளவு உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அதை மாற்ற விரும்பாமல் அதை அவனிடம் சொன்னோம்.

அதை அவனிடம் சொன்ன பிறகு பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டான். எனக்கு ஆறுதலளிக்கும் பாஸிட்டிவ் மகனாக மாறினான். இந்த விசயத்தை மிக முதிர்ச்சியானவனாக எடுத்து கொண்டான். இவ்வாறு கூறியுள்ளார் சோனாலி.

உணர்ச்சி ததும்பும் வகையில் இன்ஸ்டாகிராமில் இப்பதிவை வெளியிட்டுள்ளார் சோனாலி