பிரியங்கா சோப்ராவுடன் நடிக்க விரும்பும் பிரபல ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மார்லீ மாட்லின் அமெரிக்க த்ரில்லர் தொடரான குவான்டிகோ மூன்றாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “ நான் பிரியங்கா சோப்ரா, ஜோஹன்னா பிராடி, ஜேக் மெக்லாஃபின், எனது நண்பர் ப்ளேர் அண்டர்வுட் மற்றும் மைக்கேல் சீட்ஸ்மேன் இவர்களுடன் இணைந்து நடிக்க அதிக ஆர்வமாக உள்ளேன்” என்று தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

பிரியங்கா சோப்ரா தனது பதில் டிவிட்டரில் “குவான்டிகோவிற்கு வரவேற்கிறோம், மார்லீ மாட்லின், விரைவில் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் விஜய்யுடன் “தமிழன்” படத்தில் நடித்துள்ள பிரியங்காபாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு.குவான்டிகோ தொடர் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமாகி சக்கைப் போடு போட்டு வருகிறார். இவர் ‘பேவாட்ச்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.


பிறந்ததிலிருந்து காது கேளாதவரானமார்லீ மாட்லின் தனதுஅதீத நடிப்புத் திறமையால் உயர்ந்த விருதான கோல்டன் க்லோப் விருதை வென்றதுடன் 4 எம்மி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்நாள்வரை சிறந்த நடிகைக்கான அகாடமி விருது பெற்ற முதல் காது கேளாத நடிகர் இவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.