சென்னை விமான நிலையத்தின் அருகே நள்ளிரவில் பற்றி எரிந்த காரில் ஓட்டுநரை சிக்கிக்கொண்ட நிலையில் அவரை காப்பாற்ற முன்வராமல் சுற்றி இருந்த மக்கள் வேடிகை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை விமான நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கும் மேம்பாலத்தில் நேற்ற இரவு சென்ற ஒரு காரில், திடீரென இன்ஜின் இருக்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளிவந்தது, இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கார் கதவுகளின் லாக், ஆட்டோமேட்டிக்காக என்கேஜ் ஆகிக்கொண்டது. இதனால் காருக்குள்மாட்டிக்கொண்ட ஓட்டுநர், பின்பக்கக் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி, கடும் போராட்டத்துக்குப் பிறகே உயிர் தப்பினார். தீயணைப்பு வண்டி வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு. விமான நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  3 பேரால் நடிகை பாலியல் பலாத்காரம்: சென்னையில் பரபரப்பு

இதற்கிடையே காரின் ஓட்டுநர் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், 10 நிமிடத்துக்கு மேலாக தீப்பிடித்த காருக்குள் மாட்டிக்கொண்டேன். காரை சுற்றி 50 பேருக்கு மேல் இருந்தார்கள். யாருமே காரின் கதவை உடைச்சு என்னை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.