பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது டுவிட்டரில் விஜய் நடித்த ‘சுறா’ படம் குறித்து கூறுகையில் அந்த படத்தை தன்னால் இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். தன்யாவின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. பல வருடங்களுக்கு முன் வெளியான ‘சுறா’ படத்தை தற்போது விமர்சனம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய விஜய் ரசிகர்கள் தன்யா குறித்து ஆபாசமாக விமர்சனம் செய்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' படத்தில் டப்பிங் ஓவர்! யோகி பாபு

இதனால் அதிருப்தி அடைந்த தன்யா, ‘சுறா’ குறித்த பதிவை தனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இருப்பினும் அவரை ஒரு குரூப் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தன

இந்த நிலையில் தன்யா ராஜேந்திரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார். இந்த மனுவை கமிஷனர் சென்னை சிட்டி சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப, சைபர் கிரைம் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்

செக்சன் 354D, 506(i), 507, 509, of IPC & 67 பிரிவுகளிலும், பெண் மீதான வன்கொடுமை பிரிவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடையாள தெரியாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து மிக விரைவில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.