சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது. இப்படத்தில் ஆளும்கட்சியை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ஆளும்கட்சி அமைச்சர்கள் விஜயையும், படக்குழுவினரையும் மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருப்பதாகவும் இதுகுறித்து மேல்மட்ட விசாரணை நடத்தி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அவர் கூறினார்.