கேரள பெண் எழுத்தாளர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல உள்ள புகைப்படம் அண்மையில் வெளியாகியது. மலையாள இதழின் அட்டைப்படத்திற்கு இந்த மாதிரி போஸ் கொடுத்த மாடலிங்கும், பெண் எழுத்தாளருமான ஜிலு ஜோசப்பும் மீதும், அந்த அட்டைப்படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அண்மையில் மலையாள இதழான கிரிஹலட்சுமி என்னும் வார இதழில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக போட்டு உள்ளது. இந்த அட்டைப்புகைப்படத்திற்கு மலையாள பெண் எழுத்தாளர் ஜிலு ஜோசப் மாடலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த அட்டைப்படம் மிகவும் வைரலாகி வந்தது.கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இந்த அட்டைப்படம் வைரலாக பரவியது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவும் பெண் எழுத்தாளர் ஜிலு ஜோசப் போஸ் கொடுத்துள்ளார். இந்த வாசகம் அந்த அட்டைப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  அமெரிக்காவில் அடையாளம் தெரியாத ரஜினி - வெளியான புகைப்படம்

இந்த அட்டைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு விதமான விமா்சனங்கள் எழுந்தன. அந்த பத்திரிக்கைக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.ஒரு சிலா் இது துணிச்சலான செயல் என்றும், இது ஒரு மோசமான விளம்பர யுக்தி என்று கூறப்பட்டது. எப்படி இந்த மாதிரி ஒரு புகைப்படத்தை வெளியிடலாம் என்று ஒரு தரப்பினா் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதையும் படிங்க பாஸ்-  அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கடும் எச்சரிக்கை...

தாய்ப்பாலின் முக்கியத்துவம் உணா்த்தும் இந்த பிரசார இயக்கத்தில் மலையாள பெண் எழுத்தாளர் இணைந்துள்ளார். இந்த பிரசார இயக்கமானது மகளிர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கம் எப்படி உருவானது என்பது பற்றி அந்த இதழ் கூறியுள்ளதாவது, 23 வயது அம்ரிதா என்ற பெண் மருத்துவமனையில், பொது வெளியில் தாய்ப்பால் கொடுத்து இருந்ததை அவரது கணவா் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு, தாய்ப்பால் முக்கியத்துவத்தை குறிப்பிட்டத்தையும், அதன் காரணமாகவே இந்தப் பிரசார இயக்கம் தொடங்க முன்னுதாரணமாக இருந்ததாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  முடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு..

தற்போது கிரகலட்சுமி பத்திரிக்கைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவா் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து உள்ளார். மேலும் பெண் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் வழக்கு கொடுத்து உள்ளார். இந்த வழக்கானது வருகிற மார்ச் 16ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.