செய்திகள்

இன்றைய ராசிபலன்கள் 20/01/2018

இன்றைய ராசிபலன்கள் 20/01/2018

சற்றுமுன், செய்திகள்
மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் ராசி பலன்கள் ரிஷபம் உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி பலன்கள் மிதுனம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விய
சிவா, சிவன் இணையும் படத்தில் அனிருத்

சிவா, சிவன் இணையும் படத்தில் அனிருத்

சற்றுமுன், செய்திகள்
சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் நெருக்கமான நண்பராக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத், தற்போது இருவரும் இணையும் படத்தில் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படமும் சீரியஸ் திரைக்கதையை காமெடியாக சொல்லும் விக்னேஷ் சிவன் பாணியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘கத்தி’ போல் டபுள் ஆக்சன்: தொடக்க விழாவில் கசிந்த தகவல்

‘கத்தி’ போல் டபுள் ஆக்சன்: தொடக்க விழாவில் கசிந்த தகவல்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிக்கும் 62வது படமான 'தளபதி 62' படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் இந்த படத்தின் கெட்டப்புடன் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த போட்டோஷூட் படங்களுக்கும், இன்றைய கெட்டப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் இந்த படத்திலும் 'கத்தி' போல் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விஜய் நடிக்கும் ஒரு வேடம் நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பூஜை அன்றே இந்த படத்தின் தகவல்கள் கசிய தொடங்கிவிட்டதால் இன்னும் என்னென்ன இருக்குமோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
வேகத்தில் ஒரு விவேகம் வேண்டாமா? விஜய் ரசிகர்களை கலாய்த்த நெட்டின்சன்கள்

வேகத்தில் ஒரு விவேகம் வேண்டாமா? விஜய் ரசிகர்களை கலாய்த்த நெட்டின்சன்கள்

சற்றுமுன், செய்திகள்
இளளயதளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் விஜய் கிளாப் அடிக்கும் ஸ்டில் இணணயதளத்தில் வைரலானது உடனடியாக அந்த ஸ்டில்லை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம் என்பதற்கு பதிலாக 'இன்று முதல் பாடபிடிப்பு துவக்கம்' என்று அச்சடித்துள்ளனர். மின்னல் வேகம் இருந்தால் மட்டும் அந்த வேகத்தில் ஒரு விவேகம் வேண்டும் என்று நெட்டிசன்கள் குறிப்பாக அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
மூன்று மாதங்களில் நான்கு படங்கள் ரிலீஸ்: விஜய்சேதுபதியின் திட்டம்

மூன்று மாதங்களில் நான்கு படங்கள் ரிலீஸ்: விஜய்சேதுபதியின் திட்டம்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக படங்கள் நடித்த நடிகர் விஜய்சேதுபதிதான். திரையுலகிற்குள் நுழைந்த ஒருசில ஆண்டுகளில் அவர் தனது 25வது படத்தை முடித்துவிட்டார்' இந்த நிலையில் வரும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜய்சேதுபதி நடித்த நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படமும் மார்ச் மாதத்தில் ஜூங்கா' படமும் ஏப்ரலில் சீதக்காதி மற்றும் 96 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இமைக்கா நொடிகள், சூப்பர் டீலக்ஸ், நரசிம்ம ரெட்டி, மணிரத்னம் படம் ஆகிய படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரவுள்ளது.
விஜய்க்கு விட்டு கொடுத்ததை மீண்டும் கைப்பற்றி கொண்ட ராகவா லாரன்ஸ்

விஜய்க்கு விட்டு கொடுத்ததை மீண்டும் கைப்பற்றி கொண்ட ராகவா லாரன்ஸ்

சற்றுமுன், செய்திகள்
கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடித்த 'பைரவா; திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலை முதலில் ராகவா லாரன்ஸ்தான் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் விஜய் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தார். இந்த நிலையில் விஜய்க்காக விட்டு கொடுத்த 'பைரவா' தலைப்புக்கு முன் 'காலா'வை சேர்த்து தனது அடுத்த படத்திற்கு 'காலபைரவா' என்ற டைட்டிலை ராகவா லாரன்ஸ் தேர்வு செய்துள்ளார். இந்த படத்திற்கு 'மெர்சல்' கதாசிரியர் ராஜேந்திரபிரசாத் திரைக்கதை எழுதவுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை தவிர மேலும் இரண்டு படங்களையும் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் பூஜை சற்றுமுன்னர் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று முதல் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. மேலும் சென்னையில் 30 நாட்களும், கொல்கத்தாவில் 60 நாட்களும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட்டு இவ்வருட தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், கீர்த்திசுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தல தோனி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் தல தோனி அவரை சந்திப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்புக்கும் ரஜினியின் அரசியல் களத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இருதரப்பினர் கூறிவருகின்றனர்.  
இன்றைய ராசிபலன்கள் 19/01/2018

இன்றைய ராசிபலன்கள் 19/01/2018

சற்றுமுன், செய்திகள்
மேஷம் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ராசி பலன்கள் ரிஷபம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு ராசி பலன்கள் மிதுனம் மதியம் 1.27 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இர
வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய்க்கு இங்கிலாந்து நாட்டின் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான விருது பட்டியலில் விஜய் பெயரும் உள்ளது. இந்த விருதை விஜய் வெல்ல வேண்டுமானால் வரும் 20ஆம் தேதிக்குள் அதிக வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாக வேண்டும் விஜய்க்கு இந்த விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் இரவுபகலாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் இந்த இணையதளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வைரஸ் தாக்குதலால் விஜய் ரசிகர்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு கிடைக்க விருது கையைவிட