
திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: வேலையை காட்டுகிறதா பாஜக?
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத பாஜக, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ள நிலையில் திரிபுராவில் பதவியேற்கும் முன்பே பாஜக தனது வேலையை காட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
திரிபுரா மாநிலத்தில் தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. பாஜகவினர்களின் இந்த செயல் நடுநிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு' என்று ஒருசிலரும், 'இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்' என்று ஒருசிலரும் முகநூல்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பதவியேற்கும் முன்பே பாஜகவினர் தங்கள் அராஜக வேலையை தொடங்