தமிழகம்

வைகோ எதிர்ப்பு: ரஜினி கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

வைகோ எதிர்ப்பு: ரஜினி கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

சற்றுமுன், தமிழகம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ, அந்த கூட்டணி படுதோல்வி அடையும் என்பது சமீபகால வரலாறு. இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த வைகோ, 'ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கிண்டலடிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். மேலும் இருவருக்கும் அவர் மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் அவரது பேட்டியில் இருந்து தெரியவருகிறது. எனவே வைகோவின் எதிர்ப்பே இருவரின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக மீண்டும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.
அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

சற்றுமுன், தமிழகம்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. வேலைக்காரன் படத்தின் ஹிட்டை தொடர்ந்து அஜித்துடன் மோகன் ராஜா இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கோலிவுட்டில் கூறப்பட்டது இந்த நிலையில் திடீரென மோகன்ராஜாவை இன்று சந்தித்த தளபதி விஜய், 'வேலாயுதம் 2' படத்திற்கான கதையை தயார் செய்யும்படியும் முருகதாஸ் படத்தை அடுத்து வேலாயுதம் 2' படத்தை தொடங்கலாம் என்று விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கான திரைக்கதையை தயாரிக்கும் பணியை மோகன்ராஜா நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
4 நாளில் 40 கோடியா? விஜய்-அஜித்தை ஆச்சரியப்படுத்திய ‘வேலைக்காரன்

4 நாளில் 40 கோடியா? விஜய்-அஜித்தை ஆச்சரியப்படுத்திய ‘வேலைக்காரன்

சற்றுமுன், தமிழகம்
சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த 22ஆம் தேதி வெளியான 'வேலைககாரன்' திரைப்படம் அபார வசூலை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூல் செய்து விஜய், அஜித் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுவரை விஜய், அஜித் இடையேதான் வசூல் போட்டி இருந்தது. ஆனால் போகிற போக்கை பார்த்தால் விஜய், அஜித்தை இன்னும் ஒருசில வருடங்களில் சிவகார்த்திகேயன் முந்திவிடுவார் என்றே கோலிவுட் திரையுலகினர் கூறுகின்றனர் இந்த நிலையில் தற்போது பொன்ராம் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் வியாபாரத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

சற்றுமுன், தமிழகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் பேசினார் ரஜினிகாந்த் பேசியபோது, 'நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளேன்' என்று கூறினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ரஜினி, 'நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை, எனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகத்தான் சொன்னேன்' என்று கூறியதால் ரசிகர்கள் அமைதியாகினர் மேலும் எனக்கு அரசியல் எவ்வளவு ஆழம் என்பது தெரியும். அது தெரிந்ததால் தான் அமைதியாக உள்ளேன். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என்று கூறினார்
இன்றைய ராசிபலன்கள் 25/12/2017

இன்றைய ராசிபலன்கள் 25/12/2017

தமிழகம்
மேஷம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை ராசி பலன்கள் ரிஷபம் செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி பலன்கள் மிதுனம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
இரட்டை இலையும், 2ஜி வழக்கும் எடுபடாதது ஏன்?

இரட்டை இலையும், 2ஜி வழக்கும் எடுபடாதது ஏன்?

சற்றுமுன், தமிழகம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னர் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்தது. அதேபோல் திமுகவுக்கு ஓட்டுப்பதிவு நடந்த அன்று, 2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது ஆனால் இவை இரண்டும் ஆர்.கே.நகர் மக்களை எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன இந்த தேர்தலை பொருத்தவரையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்படும், அல்லது அதிமுகவினர் தினகரனை தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

சற்றுமுன், தமிழகம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றின் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: தினகரன்: 5339(சுயேட்சை) மதுசூதனன்: 2738(அதிமுக) மருதுகணேஷ்: 1112(திமுக) கலைக்கோட்டுதயம்: 12 (நாம் தமிழர்) கரு.நாகராஜன்: 08 (பாஜக)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

சற்றுமுன், தமிழகம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றின் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: தினகரன்: 1891 (சுயேட்சை) மதுசூதனன்: 647 (அதிமுக) மருதுகணேஷ்: 361 (திமுக) கலைக்கோட்டுதயம்: 12 (நாம் தமிழர்) கரு.நாகராஜன்: 08 (பாஜக)
சசிகலா இறந்துவிட்டாரா? முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை டுவீட்

சசிகலா இறந்துவிட்டாரா? முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை டுவீட்

சற்றுமுன், தமிழகம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனங்களை வாங்கிக்கட்டி கொள்வது வழக்கம். பாகிஸ்தான் அரசியலிலேயே வெற்றி பெற முடியாத அவர், இந்திய அரசியலை குறிப்பாக தமிழக அரசியல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவீட்டை பதிவு செய்துள்ளார் அதாவது தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டதாகவும், அவருடைய வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இவர் ஒரு பாடம் என்றும் பதிவு செய்துள்ளார் இந்த டுவீட்டுக்கு ஒரு பத்திரிகையாளர் பதிலளித்து, 'நீங்கள் பதிவு செய்த டுவீட் முற்றிலும் தவறானது. சசிகலா என்பவர் ஜெயலலிதாவின் தோழி. ஜெயலலிதாதான் நடிகை மற்றும் அரசியல்வாதி. சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். இனிமேலாவது ஒரு முதிர்ச்சியான அ
விஜய்யிடம் மன்னிப்பு கேட்டாரா ‘அருவி’ தயாரிப்பாளர்

விஜய்யிடம் மன்னிப்பு கேட்டாரா ‘அருவி’ தயாரிப்பாளர்

சற்றுமுன், தமிழகம்
கடந்த வாரம் வெளியான அருவி' திரைப்படத்தை உலகத்தமிழர்களே பாராட்டி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மட்டும் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'விஜய் எந்த நல்ல படத்தில் நடித்திருக்கிறார்' என்ற ஒரே ஒரு வசனம் தான் இந்த எதிர்ப்புக்கு காரணம். மேலும் விஜய் ரசிகர்கள் இந்த படம் எகிப்து நாட்டின் படம் ஒன்'றை காப்பி அடித்து எடுத்ததாகவும் வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நேற்று தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! என்று கூறியுள்ளார் விஜய்யிடமும், விஜய் ரசிகர்களிடமும் தான் மறைமு