சின்னத்திரை

அனுஷ்காவுக்கு ஹீல்ஸ், அமிதாப்புக்கு ஸ்டூலா? சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த டிவி நிகழ்ச்சி

அனுஷ்காவுக்கு ஹீல்ஸ், அமிதாப்புக்கு ஸ்டூலா? சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த டிவி நிகழ்ச்சி

சற்றுமுன், சின்னத்திரை
சிங்கம் படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா நடித்தபோது சூர்யாவை விட அனுஷ்கா உயரமாக இருந்ததால் சூர்யா ஹீல்ஸ் ஷூ அணிந்து நடித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தொகுப்பாளினிகள் கிண்டலடித்துள்ளனர். அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டு நடித்த சூர்யா, அமிதாப்புடன் நடிக்கும்போது ஸ்டுல் போட்டுத்தான் நடிக்கணும் என்று கிண்டல் செய்தனர். அல்லது இருவரையும் உட்கார வைத்தே படம் முழுவதும் எடுத்துவிட்டால் இந்த உயர பிரச்சனை வராது என்றும் வச்சு செஞ்சுள்ளனர். இதற்கு சூர்யாவின் ரசிகர்களிடம் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.
சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சன் மியூசிக் சேனலில் இருந்து வெளியேறிய அஞ்சனா

சற்றுமுன், சின்னத்திரை
அஞ்சனா என்றாலே சன் மியூசிக் சேனலில் அவர் தொகுத்து வந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இந்த நிலையில் அஞ்சனாவுக்கும் நடிகர் கயல் சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது திடீரென சன் மியூசிக் சேனலில் இருந்து அவர் வெளியேறியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இத்தனை வருடம் தனக்கு ஆதரவு கொடுத்த சன் மியூசிக் சேனல், மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும், அந்த ஷோவில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேறு சேனலில் அஞ்சனா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
நடிகை உடைமாற்றியதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு தர்ம அடி

நடிகை உடைமாற்றியதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு தர்ம அடி

சற்றுமுன், சின்னத்திரை
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடப்பது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் ஒரு பிரபல நடிகை நடித்த தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த நடிகை உடை மாற்றுவதற்காக ஒரு அறைக்கு சென்றார். அப்போது மறைந்திருந்த வாலிபர் ஒருவர் அந்த நடிகையை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது இதனை கண்டு அலறிய அந்த நடிகையின் கூச்சலை கேட்டு படக்குழுவினர் விரைந்து வந்து அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரின் செல்போன் அடித்து நொறுக்கப்பட்டதோடு, அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆனாலும் இதுகுறித்து நடிகையின் தரப்பில் போலீஸ் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 வயதில் 20 நாடுகள்: பிரபல நடிகையின் ஆசை

20 வயதில் 20 நாடுகள்: பிரபல நடிகையின் ஆசை

சற்றுமுன், சின்னத்திரை
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து கொண்டிருப்பவர் மகாலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். தனது மகனின் முதல் பிறந்த நாளை பாங்காக்கிலும், 2வது பிறந்த நாளை சிங்கப்பூரிலும் கொண்டாடிய மகாலட்சுமி, விரைவில் வரவுள்ள மூன்றாவது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளார். தன்னுடைய மகன் 20 வயதில் 20 நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றும், அதுவே தனது ஆசை என்றும் மகாலட்சுமி கூறியுள்ளார்.
ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா கைது! ரசிகர்கள் அதிர்ச்சி

ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா கைது! ரசிகர்கள் அதிர்ச்சி

சற்றுமுன், சின்னத்திரை
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி' சீரியலில் செம்பா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஆலியா. இவர் சமீபத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டதாக அவரே டப்மாஷ் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். செம்பா தனது தோழியுடன் ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது சைக்கிளில் டபுள்ஸ் போயுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் எனவே செம்பாவையும் அவரது தோழியையும் ஜப்பான் போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் ஜப்பானில் உள்ள இந்த விதி தங்களுக்கு தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டு போலீசாரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த அடுத்த படம்

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த அடுத்த படம்

சற்றுமுன், சின்னத்திரை
கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினாவில் நடத்திய புரட்சி காரணமாக கோலிவுட்டிலும் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. கருப்பன், மதுர வீரன் ஆகிய படங்களை அடுத்து தற்போது பாண்டியராஜ் தயாரிப்பில் 'மெரினா புரட்சி' என்ற தலைப்பிலும் ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்./ எம்.எஸ்.ராஜ் இயக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தை அப்படியே ஃபாலோ செய்வது நான் ஒருத்திதான்: பிரபல நடிகை

அஜித்தை அப்படியே ஃபாலோ செய்வது நான் ஒருத்திதான்: பிரபல நடிகை

சற்றுமுன், சின்னத்திரை
அபூர்வ ராகங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஸ்வேதா, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ள நிலையில் அடிக்கடி தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வீட்டில் இருந்து பிரியாணி செய்து கொண்டு போய் கொடுப்பாராம் அபூர்வ ராகங்கல் முதல் நாள் படப்பிடிப்பின்போது இவர் கொடுத்த பிரியாணி, தொடரின் குழுவினர்களை கவர்ந்ததால் அவ்வப்போது பிரியாணி கொண்டு வருகிறார் ஸ்வேதா அஜித்தும் அடிக்கடி படப்பிடிப்புகளின்போது பிரியாணி செய்து கொடுப்பதை போல, அவரை ஃபாலோ செய்து இதை செய்து வருவதாக ஸ்வேதா கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை நந்தினிக்கு 2வது திருமணமா?

சின்னத்திரை நடிகை நந்தினிக்கு 2வது திருமணமா?

சற்றுமுன், சின்னத்திரை
சின்னத்திரை நடிகை மைனா என்ற நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்த நிலையில் அவர் தற்போது தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நந்தினிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாகவும், டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த தகவலை மைனாவின் தரப்பு உறுதி செய்யவில்லை. தை பிறந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

அருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

சின்னத்திரை, தமிழகம்
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் 'அருவி' படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்களை மட்டும் இந்த படம் ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் 'விஜய் நடித்த நல்ல படமா? என்று ஒரு பெண் கேரக்டர் வசனம் பேசுவார். இந்த வசனம் விஜய் ரசிகர்களை காயப்படுத்தியுள்ளதால் இயக்குனரை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டி வருகின்றனர் இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அருண் பிரபு, '"படம் முழுவதும் பலரையும் விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருக்கும், அந்த வகையில் தான் இந்த சீனையும் யோசித்தேன். வேண்டுமென்றே விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை யோசிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட சாந்த சொரூபியான ‘ராஜா ராணி’ செம்பா

நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட சாந்த சொரூபியான ‘ராஜா ராணி’ செம்பா

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக அதில் நடித்து வரும் செம்பா, சின்னயா, சின்னயா என்று உருகுவது அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. சீரியலில் சாந்த சொரூபியாக நடித்த நடிகை செம்பா, சமீபத்தில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது. குலசை தசரா நிகழ்ச்சியின்போது செம்பா ஆடிய ஆட்டம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் செம்பாவுக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்து கொண்டிருக்கின்றதாம், ஆனால் சினிமாவில் துக்கடா வேடத்தில் நடிப்பதை விட சீரியலில் நாயகி வேடத்தில் நடிப்பதையே விரும்புவதாக அவர் கூறி வருகிறாராம். https://www.youtube.com/watch?v=nV0_zQIzHMY